NSK - TAMILAN ULAGAM

NSK - TAMILAN ULAGAM
NSK - DIPLOMA

Sunday, January 19, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெறும் வழிமுறைகள்.. கன்னியாகுமரி கலெக்டர் விளக்கம்

கன்னியாகுமரி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெறும் வழிமுறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவி தொகை கிடைக்கிறது. இதை பற்றி விவரமாக பார்ப்போம்.

தமிழ்நாடு அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்கிறது. பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பணம் மாதம் மாதம் வங்கி கணக்கில் வழங்கப்படுவது இல்லை. இது வங்கி கணக்கில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வரும்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது ஆகும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதும் கிடையாது. அதேநேரம் அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.600/ கிடைக்கும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed) - ரூ.750/ கிடைக்கும். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) - ரூ.1000 கிடைக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 1.1.2025 முதல் 31.3.2025-ம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 31.12.2024 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31.3.2025 அன்று உச்சவயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும்.

Perambalur-ல் பட்டியலின இளைஞர் படுகொலை…| Crime

Recommended For You
மன்னன் படத்தில் ரூ. 1 கோடி சம்பளம் கேட்ட கவுண்டமணி! 
"மன்னன் படத்தில் ரூ. 1 கோடி சம்பளம் கேட்ட கவுண்டமணி! "அந்த" சீன் மட்டும் ரஜினிக்கு 21 டேக்காமே! "

உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பதிவுசெய்து 31.12.2024 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றிருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயதுவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

இந்த உதவித்தொகையினை பெற மனுதாரர் அரசிடம் இருந்து வேறு எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. முற்றிலுமாக வேலையில்லாதவராகவே இருக்க வேண்டும். பள்ளிக்கல்வி அல்லது கல்லூரி கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ-மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Programming in C EEE MCQ QUESTIONS

 PROGRAMMING IN C IMPORTANT MCQ UNIT I – INTRODUCTION TO C PROGRAMMING Q1. C language was developed by: a) Dennis Ritchie b) James Gosling c...