மாதிரி வினாத்தாள்
TA232110
(Tamils and Technology)
April 2026
Time-Two hours (Maximum Marks: 60)
Ν.Β. 1. Answer all questions under Part-A. Each question carries 1 mark.
2. Answer any 5 questions under Part-B. Each question carries 2 marks.
3. Answer any 3 questions under Part-C. Each question carries 10 marks.
PART-A
1. பிலிப்பைன்ஸில் ஆடைகள் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருள் எது?
Which raw material was used in the Philippines for making clothes?
அ) மல்பரி மரவுரி / Mulberry bark
ஆ) வாழை நார் / Banana fiber
இ) பருத்தி / Cotton
ஈ) கம்பளி / Wool
2. ஹெரோடஸ் இந்திய பஞ்சை எவ்வாறு குறிப்பிட்டார்?
How did Herodotus describe Indian cotton?
அ) "மரங்களில் வளரும் பஞ்சு" / "Cotton growing on trees"
ஆ) மண்ணில் வளரும் பஞ்சு" / "Cotton growing on soil"
இ) ஆடுகளால் தரப்படும் பஞ்சு" / "Cotton given by sheep"
ஈ) "வானத்தில் மிதக்கும் பஞ்சு" / "Cotton floating in the sky"
3. பருத்திக்கு அப்பாற்பட்டு எந்தெந்த மரங்களில் இருந்து பஞ்சு சேகரிக்கப்பட்டது? Apart from cotton, from which trees was fibre collected for weaving?
அ) இலவமரம், கோங்குமரம் / Ilavamaram and Kongumaram
ஆ) தேங்காய் மரம், பனைமரம் / Coconut tree and Palm tree
இ) வேப்பமரம், ஆமணக்கு மரம் / Neem tree and Castor tree
ஈ) மாமரம், கொய்யா மரம் / Mango tree and Guava tree
4. ராட்டை இயந்திரத்தின் மூலம் நூலாக்கப்படும் திரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
In what were the threads wound on the spinning wheel first stored?
அ) கதிர் / Kathir (stick)
ஆ) போவனி / Povani
இ) பாவு / Paavu
ஈ) பாவுஜத்தம் / Paavajatham
5. தமிழர்கள் முதன்மை பெற்றுத் திகழ்ந்த கலைகள் மொத்தம்
The total number of arts in which the Tamils excelled is
அ) 64
ஆ) 74
இ) 84
ஈ) 94
6. சிற்றில் என்றும் பேரில் என்றும் கட்டடங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன?
Buildings were classified as Chitril (small houses) and Peril (large houses) based on
அ) வீட்டின் கட்டட வடிவமைப்பு / The architectural design of the house
ஆ) வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை / The number of people in the house
இ) வீடு அமைந்துள்ள சூழல் / The surroundings where the house was Located
ஈ) நகரம் மற்றும் கிராமப் புற அமைப்பில் இருந்த வேறுபாடு / The distinction between urban and rural settings
7. ஆடல் அரங்கத்தை அமைக்கும் கோலின் அளவு
The size of the design for constructing the dance stage is:
அ) 24 கை பெருவிரல் அளவு / 24 hand-finger units
ஆ) 23 கை பெருவிரல் அளவு / 23 hand-finger units
இ) 22 கை பெருவிரல் அளவு / 22 hand-finger units
ஈ) 14 கை பெருவிரல் அளவு / 14 hand-finger units
8. ஒற்றைக்கல் ரதங்களில் பெரியது
Which is the largest among the monolithic chariots?
அ) கணேச ரதம் / Ganesha Ratha
ஆ) பிடாரி ரதம் / Pidari Ratha
இ) வலையன்குட்டை ரதம் / Valaiyankuttai Ratha
ஈ) திரௌபதி ரதம் / Draupathi Ratha
9. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே நிலை பெற்றிருந்த பொருள் ஈட்டும் மரபு
Before the time of the Tolkäppiyam, the tradition of obtaining resources was based on:
அ) மலை சார்ந்த பொருள் ஈட்டும் மரபு / Mountain-based resource gathering tradition
ஆ) காடு சார்ந்த பொருள் ஈட்டும் மரபு / Forest-based resource gathering tradition
இ) வயல் சார்ந்த பொருள் ஈட்டும் மரபு / Field-based resource gathering tradition
ஈ) கடல் சார்ந்த பொருள் ஈட்டும் மரபு / Sea-based resource gathering tradition
10. மனித நாகரிகத்தில் முன்னேற்றத்தைக் கற்கால நாகரிகத்திலிருந்து உலோக கால நாகரிகத்திற்கு நகர்த்திய உலோகங்களில் முக்கியப் பங்கு வகிப்பது?
Which metal played an important role in advancing human civilization from the Stone Age to the Metal Age?
அ) இரும்பு / Iron
ஆ) செம்பு / Copper
இ) பொன் / Gold
ஈ) வெண்கலம் / Bronze
11. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் முதன்மையான கருவி
The main device used to steer a ship in the right direction is
அ) கூம்பு / Koombu
ஆ) வங்கு / Vangku
இ) சுக்கான் / Sukkan (rudder)
ஈ)stiரா / Era
12. பூழியர் என்போர்
"Poozhiyar' refers to
அ) முத்துக்குளிப்பவர் / Pearl divers
ஆ) பொன்னைத் தோண்டுபவர் / Gold miners
இ) பொன்னை உருக்குவோர் / Gold smelters
ஈ) மணிகளின் மூலப்பொருட்களைத் தொகுப்போர் / Collectors of raw
materials for beads
13. வேளாண் தொழிலுக்கு அடிப்படையாக விளங்குவது எது?
What is the fundamental basis for agricultural industry?
அ) கல்வி / Education
ஆ) இயந்திரங்கள் / Machinery
இ) நீர் / Water
ஈ) விவசாயி / Farmer
14. அருவி, சுனை ஆகியன எந்த நிலத்தின் நீர்நிலைகள்?
Waterfalls and springs belong to which water body type?
அ) குறிஞ்சி / Kurinji
ஆ) மருதம் / Marutham
இ) பாலை / Palai
ஈ) முல்லை / Mullai
15. உபரிநீரை வெளியேற்றும் திறப்பானின் பெயர்?
What is the name of the outlet used to release surplus water?
அ) நீரோடி / Neerodi
ஆ) சேறோடி / Serodi
இ) கலிங்கு / Kalingu
ஈ) மதகு / Mathagu
16. பழந்தமிழர் பயன்படுத்திய கலப்பையின் வடிவம்?
The plough used by ancient Tamils was shaped like?
அ) பெண்யானையின் வாய் போன்றது / Mouth of a female elephant
ஆ) ஆண்யானையின் வாய் போன்றது / Mouth of a male elephant
இ) பெண்யானையின் தந்தம் போன்றது / Tusk of a female elephant
ஈ) ஆண்யானையின் தந்தம் போன்றது / Tusk of a male elephant
17. தொலைவில் உள்ள பொருளை அருகில் இருப்பது போல் காட்டலாம் என்ற கலிலியோவின் அறிவியல் உண்மையை சொன்ன புலவர்
The poet who stated Galileo's scientific truth that a distant object can be made to appear as if it is near,
அ) கம்பர் / Kambar
ஆ) ஔவையர் / Avvaiyar
இ) பரணர் / Paranar
ஈ) திருவள்ளுவர் /Thiruvalluvar
18. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் நிறுவனத் தலைவராக பணியாற்றியவர் யார்?
Who served as the founding Vice-Chancellor of the Tamil Virtual Academy?
அ) பா.வே.மாணிக்கம் / P. V. Manickam
ஆ) என்.வே.வேலன் / N. V. Velan
இ) பெ.வே.அப்புசாமி / Pe. Ve. Appusamy
ஈ) வா.செ.குழந்தைசாமி / Va. Se. Kulandaisamy
19 கூற்று 1 கணிணி ஒரு மின்னணு சாதனமாகும் Statement 1: A computer is an electronic device.
கூற்று 2 இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
Statement 2: It operates based on machine language.
அ) கூற்று 1 சரி கூற்று 2 சரி / Both Statement 1 and Statement 2 are correct
ஆ) கூற்று 1 தவறு கூற்று 2 தவறு / Both Statement 1 and Statement 2 are wrong
இ) கூற்று 1 சரி கூற்று 2 தவறு/ Statement 1 is correct, Statement 2 is wrong
ஈ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி / Statement 1 is wrong, Statement 2 is correct
20. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன? How many books are there in Roja Muthiah Research Library?
அ) பத்து ஆயிரம் / 10,000
ஆ) ஐம்பது ஆயிரம் / 50,000
இ) ஒரு லட்சத்துக்கும் மேல் / Over 100,000
ஈ) இருபது ஆயிரம் / 20,000
No comments:
Post a Comment