NSK - TAMILAN ULAGAM

NSK - TAMILAN ULAGAM
NSK - DIPLOMA

Sunday, January 19, 2025

பணிக்கு சேரும்போதே ரூ.75,000 போனஸ்! டிப்ளமோ முடித்தோரை அழைக்கும் விப்ரோ.. ஜனவரி 31 கடைசி நாள்

 


சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி 31 கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு போனஸ் + சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ‛பிடெக்' பயிலவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.


இந்தியாவில் முக்கியமான ஐடி நிறுவனமாக விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போது விப்ரோவில் School of IT infrastructure Management என்ற அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிப்பை 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். 2023, 2024, 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோர் தொலைத்தூர கல்வி மூலம் 10, 12ம் வகுப்பு படித்திருக்கலாம் ஆனால் டிப்ளமோவை பார்ட் ஃடைம், தொலைத்தூர கல்வி மூலம் முடித்திருக்க கூடாது. கண்டிப்பாக கல்லூரி சென்று டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.


டிப்ளமோவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் கண்டிப்பாக கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பிசினஸ் கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சம்பளமாக ரூ.12,400 வழங்கப்படும். அதன்பிறகு 2ம் ஆண்டு ரூ.15,488, 3ம் ஆண்டில் ரூ.17,553, 4வது ஆண்டில் ரூ19,918 சம்பளம் என்பது வழங்கப்படும். இந்த சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்படும். அதோடு பணிக்கு சேரும்போதே ரூ.75 ஆயிரம் ஜாயினிங் போனஸாக வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பிடெக் படிப்பை படிக்க விப்ரோவில் இருந்து ஸ்பான்ஷர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. படிப்புக்கான செலவு முழுவதும் விப்ரோ நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். விப்ரோவில் பணியாற்றி கொண்டே பிடெக் படிப்பை இலவசமாக முடிக்கலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது ஜனவரி 31ம் தேதியாகும். அன்று இரவு 11.59 மணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு 4 ரவுண்ட்டுகளாக இண்டர்வியூ என்பது நடக்கும்.


முதலில் ஆன்லைன் அசஸ்மென்ட் என்ற வகையில் தலா 20 நிமிடங்கள் என்று மொத்தம் 80 நிமிடங்கள் வரை முதல் ரவுண்ட் நடக்கும். இதில் Verbal, 2வது Analytical, 3வது Quantitative, 4வது Written Communication ஆகியவை இருக்கும். அடுத்ததாக 2வது ரவுண்ட்டில் Bussiness Discussion, 3வது ரவுண்ட்டில் எச்ஆர் டிஸ்கஷன், 4வது ரவுண்ட்டில் Free Skill Agreement இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பணிக்கு சர்வீஸ் அக்ரிமென்ட் உள்ளது. சர்வீஸ் அக்ரிமென்ட்டாக 48 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 4 ஆண்டுகள் விப்ரோவில் கட்டாயம் பணி செய்ய வேண்டும். அதற்கு முன்பு பணியை விடும் பட்சத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Apply for this job



No comments:

Post a Comment

Programming in C EEE MCQ QUESTIONS

 PROGRAMMING IN C IMPORTANT MCQ UNIT I – INTRODUCTION TO C PROGRAMMING Q1. C language was developed by: a) Dennis Ritchie b) James Gosling c...